தனியார் மருத்துவக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
Chengalpattu King 24x7 |22 Jan 2025 10:26 AM GMT
தனியார் மருத்துவக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
தனியார் மருத்துவ கல்லூரி சார்பில் சுகாதார மனிதநேயம் மற்றும் சமூக மருத்துவம் குறித்து சர்வதேச பட்டதாரிகள் கருத்தரங்கம் மற்றும் செவிலியர் கல்லூரியின் மாணவிகள் விளக்கு ஏற்றும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் இயங்கி வரும்கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுபலா சுனில் விஸ்வாஸ்ராவ் அனைவரைரும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரிக்கார்டோ லியோன்-போர்கெஸ், ஐரோப்பாவில் உள்ள மருத்துவப் பள்ளிகளின் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஹார்ம் பீட்டர்ஸ், போர்ச்சுக்களில் ஸ்கூல் ஆஃப் மெடிசின், லிஸ்பன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர். மதலோனா பாட் ரிசியோ, ஐரோப்பாவில் மருத்துவக் கல்விக்கான முன்னாள் தலைவர் சங்கம். டாக்டர் ரஸ்ஸல் டிசோசா, ஆசிய பசிபிக் பிரிவுத் தலைவர், கல்வித் துறை இயக்குநர், யுனெஸ்கோ பயோஎதிக்ஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது கருத்தரங்கில் மருத்துவ இளநிலைமாணவ மாணவிகளுக்கும் செவிலியர்களுக்கும் சர்வதேச மருத்துவம் மருத்துவர்கள் பாதுகாப்பு சர்வதேச மருத்துவ சட்டங்கள் ஆகியவற்றை குறித்துஇந்த கருத்தரங்கில் உரையாற்றப்பட்டது இதில் 2023 -ஆம் ஆண்டு படித்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோருக்கு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு படிக்கும் செவிலியர்கள் சர்வதேச மருத்துவர்களை மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி வர வேற்றனர்.
Next Story