கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பச்சையம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், மூவரும் செங்கல்பட்டு தண்டுகரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,22, வினோத், 21, சென்னை, ஆவடி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 21, என தெரிந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களின் கூட்டாளியான ஆவடி பகுதியைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
Next Story