வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்
Chengalpattu King 24x7 |22 Jan 2025 10:39 AM GMT
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்
செங்கல்பட்டில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 24ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 24ம் தேதி காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை, கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடத்தில், தரை தளம் டி - பிளாக்கில், இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5,000 காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இதில், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வி தகுதி உடையவர்கள், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண் 044 -27426020- 63834 60933- 94868 70577 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story