கல்லக்குடியில் நாளை மின்நிறுத்தம்
Tiruchirappalli King 24x7 |22 Jan 2025 11:06 AM GMT
வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்
திருச்சி மாவட்டம், கல்லக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜன. 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஓரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பாடி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், வி.சி.புரம், கோவாண்டக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ.மேட்டூா், நத்தம், திருமாங்குடி, டி. கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அன்புசெல்வம் தெரிவித்துள்ளாா்.
Next Story