சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது இந்த அருவி சுற்றுலாத்தலமாகவும் ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில பொதுமக்களும் வருகை தந்து அருவியில் நீராடி செல்வது வழக்கம் இந்த நிலையில் சுருளி அருவியின் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர் கடந்த திங்கட்கிழமை சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தெரிந்த நிலையில் தற்போது சுருளி அருவியின் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அந்த வழித்தடத்தில் இருந்து யானைகள் செல்லும் வரை அருகில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
Next Story




