மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் தற்காலிக பணியிடம்- மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் தற்காலிக பணியிடம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
பணியிடம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் பணியிடம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் நியமனம் உள்ளது. தகுதி உள்ள இளம் தொழில் வல்லுனருக்கு மாதாந்திர தொகுப்பு ஊதியத்தில் ரூபாய் 50,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 27.1.2025 தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை துணை இயக்குனர் மாவட்ட புள்ளியல் அலுவலகம் அறை எண் .43 இரண்டாவது தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story