மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ கடிதம்

மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ கடிதம்
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை திருமங்கலம் எம்எல்ஏ உதயகுமார் ஆட்சியருக்கு இன்று (ஜன.22)கடிதம் எழுதியுள்ளார். அதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் உனி,வில்லூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இந்தாண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நடவு செய்யப்பட்டது. உழவு செய்தல் வரப்பு வெட்டுதல், நடவுபணி களையெடுத்தல், மருந்தடித்தல், அறுவடை உள்பட பல பணிகளுக்கு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவு ஆவதாக தெரிகிறது.. நெற்பயிர் நன்கு விளைந்துள்ள நிலையில் குலை நோய் தாக்குதலால் கடுமையைாக பாதிப்படைந்துள்ளது. வேளான்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் குறிப்பிட்ட மருந்துகளை வயலில் தெளித்ததாகவும் ஆனால் அதன் பின்னரும் குலைநோய் தாக்குதலில் இருந்து மீன முடியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உளி வில்லூர் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு குலை நோய் நாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை ஆய்வுசெய்து பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு நிவாரணம் வழங்க வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Next Story