மதுரை - பழனி சிறப்பு இரயில் இயக்கம்

மதுரை - பழனி சிறப்பு இரயில் இயக்கம்
மதுரையிலிருந்து பழனிக்கு தை பூச விழாவை முன்னிட்டு சிறப்பு இரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் பிப்.11,12 தேதிகளில் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனியை சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக பழனியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story