தகாத வார்த்தைகளை பேசியதாக கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா போராட்டம் .................
Nilgiris King 24x7 |22 Jan 2025 12:50 PM GMT
தகாத வார்த்தைகளை பேசியதாக கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா போராட்டம் .................
தகாத வார்த்தைகளை பேசியதாக கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா போராட்டம் ................. நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது இங்கு 4,500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் தொடர்ந்து சில வருடங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கல்லூரி நிதியை கையாடல் செய்வது, மாணவ மாணவிகளுக்கு துறை மாறுதலுக்கு ரகசியமாக லஞ்சம் பெற்றது என பல சர்ச்சையில் இருந்து வருகிறது. தொடர்ந்து கல்லூரிக்கு புதிய முதல்வராக ராமலட்சுமி என்பவர் பொறுப்பேற்றார். இந்தநிலையில் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நல நிதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா விவகாரங்களில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக கல்லூரி முதல்வர் மீது குற்றம் சாட்டி தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த விசாரணையானது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிலையில் மீண்டும் அரசு கல்லூரி முதல்வர் மேல் பேராசிரியர்கள் அலுவலர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரில் தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லூரி முதல்வர் தகாத வார்த்தை மற்றும் தரக்குறைவான வார்த்தைகள் கூறி திட்டுவதாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து இதைப் போன்ற செயலில் ஈடுபட்டு வரும் கல்லூரி முதல்வரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story