கரூரில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்.

கரூரில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்.
கரூரில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்களை பெற்ற அமைச்சர்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஊராட்சி பகுதியில் இரண்டாவது நாளாக இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொது மக்களின் பொது பிரச்சனைகள் குறித்த மனுக்களை அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story