அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், நான்கு,இரு சக்கர வாகனங்களின் மூலம் விழிப்புணர்வு.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள 3வது புத்தக கண்காட்சி குறித்த பொதுமக்கள் அறியும் வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களில் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த ஓட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியர் ஒட்டி விழிப்புணர்வு.
திருவாரூர் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் எதிர்வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை நடைபெறவுள்ள 3வது புத்தக கண்காட்சி குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களில் புத்தக கண்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த ஓட்டுவில்லைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களிடத்திலும் புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து தெரியப்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மக்களிடமும், மாணவர்களிடமும் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு இந்த புத்தக திருவிழா நல்ல வாய்ப்பாக அமையும். இந்நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜா, திருவாரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story