தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த மாற்றுத்திறனாளிகள்
Komarapalayam King 24x7 |22 Jan 2025 1:25 PM GMT
குமாரபாளையத்தில் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். இது பற்றி மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது: இரண்டு காரணங்களுக்காக வருந்துகிறோம். மாற்றுத்திறனுடையோர் நகராட்சி பகுதியில் சாலையோரம் கடை வைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதிப்பது இல்லை. அரசுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் 5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க வேண்டும் என்று அரசானை உள்ளது. அதன்படி புதிய பேருந்து நிலைய கடைகளில் எண்: 1,2, இரு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜன. 23ல் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைக்கு அட்வான்ஸ் இரண்டு லட்சம், வாடகை, மாதம் 8 ஆயிரத்து 500, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எப்படி மாற்றுத்திறனாளி பயன்பெற முடியும்? நகராட்சி நிர்வாகம் எங்களை முற்றிலும் வஞ்சிக்கிறது. அடுத்து இரண்டாவதாக, நாங்கள் வாழ வழியில்லாமல் இருந்த காலத்தில், லாட்டரி விற்பனை செய்து வாழ்ந்து வந்தோம். அதனையும் தமிழக அரசு தடை செய்தது. வாழ வழி இல்லாத நிலையில் ஊராட்சிகளில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் வாய்ப்பு வழங்கினார்கள். நகரத்தில் வசிக்கும் மாற்றுத்திராளிகள் கூட கிராமத்தில் வசித்து, 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது தமிழக அரசு, நாங்கள் எப்படி வாழலாம் எனும் வகையில், ஊராட்சியை, நகராட்சியாக மாற்றுகிறது. இப்போது இந்த வேலையும் போனது. ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, பிப். 3ல் இருந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story