நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம்
Komarapalayam King 24x7 |22 Jan 2025 1:30 PM GMT
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உள்ள எட்டு வார்டுகளை குமாரபாளையம் நகராட்சியுடன் தமிழக அரசு இணைக்கும் முடிவை கைவிடக் கோரி சி.பி.,எம். சார்பில்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உள்ள எட்டு வார்டுகளை குமாரபாளையம் நகராட்சியுடன் தமிழக அரசு இணைக்கும் முடிவை கைவிடக் கோரி சி.பி.,எம். சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தபட்டது குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உள்ள எட்டு வார்டுகளை குமாரபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் உத்தேச முடிவை கைவிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குப்பாண்டபாளையம் ஊராட்சியை குமாரபாளையம் நகராட்சியோடு இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம், கிராமப்புறங்கள் பயன்பெறும் இலவச வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காது. மேலும் தொழில் வரி, வீட்டு வரி,குடிநீர் வரி உள்ளிட்டவை பல மடங்குகள் உயர்வதால், இந்த பகுதியில் உள்ள கிராமப்புற ஏழை மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாவார்கள். எனவே, தமிழக அரசு இந்த உத்தேச முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், தனேந்திரன், தனசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
Next Story