காகித புரத்தில் மரங்களை காவாத்து செய்யும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு.
Karur King 24x7 |22 Jan 2025 1:53 PM GMT
காகித புரத்தில் மரங்களை காவாத்து செய்யும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு.
காகித புரத்தில் மரங்களை காவாத்து செய்யும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் பகுதியில் செயல்படும் ஒமையா இந்தியா பிரைவேட் கம்பெனி வளாகத்தில் தோட்டத்தை பராமரிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்தவர்- கரூர் மாவட்டம், புன்னம், ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 53. இவர் ஜனவரி 21ஆம் தேதி காலை 11 மணியளவில் கம்பெனி வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகளை களையும் காவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த பெருமாளின் மகன் செல்வராஜ் வயது 33 எனபவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பெருமாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story