குமரி : கல்லூரி மாணவர் திடீர் மாயம் - தாய் புகார்
Nagercoil King 24x7 |22 Jan 2025 2:03 PM GMT
பளுகல்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் சுமேஷ்ராஜ் (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவனை தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சுமேஷ் ராஜ் தனது தாயார் சுதா என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம். இது தொடர்பாக சுதா கொடுத்த புகாரின் பேரில் பளு கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுமேஷ் ராஜை தேடி வருகிறார்கள்.
Next Story