சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான
Nagapattinam King 24x7 |22 Jan 2025 2:06 PM GMT
ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அந்த இடத்தை மீட்கக்கோரிய உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ராணி தலைமையில், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதிஷ் மற்றும் நில அளவையர்கள், கோவில் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி மதிப்பிலான கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டது . அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.
Next Story