வைரவருக்கு சிறப்பு வழிபாடு

வைரவருக்கு சிறப்பு வழிபாடு
மதுரை கூடக் கோவில் வைரவருக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூட கோவில் கண்மாய் கரையில் உள்ள வைரவர் திருக்கோயிலில் நேற்று ( ஜன.21) இரவு தேய் பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு வைரவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . அன்னதான குழு சார்பில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Next Story