பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை மனு வழங்கினர்
Thoothukudi King 24x7 |22 Jan 2025 3:31 PM GMT
தூத்துக்குடி மாநகராட்சியில் மோசமான சாலைகள் எங்கும் இல்லை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் தங்களது பகுதியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அரசு நிர்வாகம் மக்களை தேடி செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடியில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களை சந்தித்து குறைகள் கேட்கப்பட்டு பொதுமக்களை அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கோரி மாநகராட்சி சேவை குறித்தும் பொதுமக்களிடம் மனுகளை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி 2, 3, 16, 17, 18, வார்டுக்குட்பட்ட பகுதியில் மட்டும் காலியிடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதுவும் விரைவில் அப்பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படும் பொழுது அதிலிருந்து எடுக்கப்படும் மண் மூலம் கழிவு நீர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். கால்நடைகளை ரோட்டில் நடமாட விட்டால் அதற்கு ரூ. ஐந்தாயிரம் அபராதம் விதிப்பதோடு பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார் எங்கெல்லாம் புகார் வருகிறதோ அதன் அடிப்படையில் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதே போன்று நாய்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. மேலும் விரைவில் தெருவில் அலையும் நாய்களை பிடித்து பராமரிப்பதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சியில் மோசமான சாலைகள் எங்கும் இல்லை என அவர் தெரிவித்தார். மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சி பகுதியில் போடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து இன்றைய தினம் பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த ஒருவருக்கும் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த இரண்டு பேர்களுக்கும் உடனடியாக சான்றிதழ்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story