பாண்டமங்கலம் அருகே தந்தையை தாக்கிய மகன் கைது.

பாண்டமங்கலம் அருகே தந்தையை தாக்கிய மகன் கைது.
பாண்டமங்கலம் அருகே தந்தையை தாக்கிய மகன் கைது செய்து கிளை சிறையில் அடைப்பு.
பரமத்திவேலூர்,ஜன.22- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி( 58) லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி(50) கூலித்தொழிலாளி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணசாமி தனது இளைய மகன் தனசீலன் (24) வீட்டில் வைத்திருந்த பணத்தில்  ரூ.500-ஐ அவருக்கு தெரியாமல் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தனசீலன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமியை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து பணத்தை எதற்காக என்னிடம் கேட்காமல் எடுத்தாய் என தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்த இரண்டு மது பாட்டிலை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணசாமி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது மனைவி பரமேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பலத்த காயம் அடைந்த கிருஷ்ணசாமியை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம்  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணசாமியின் மனைவி பரமேஸ்வரி   மகன் தனசீலன் மீது வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தந்தையை பிராந்தி பாட்டிலால் தாக்கிய குணசீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் தனசீலனை பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story