தாழ்வு மனப்பான்மையை கடந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். ஆண்டிபட்டி அரசு கல்லூரி விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு.

தாழ்வு மனப்பான்மையை கடந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். ஆண்டிபட்டி அரசு கல்லூரி விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு.
ஆண்டிபட்டி சேர்மன் சந்திரகலா, முன்னாள் சேர்மன் ராமசாமி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிஷாந்த் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சேகர் ,ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து ,தேசிய நல் ஆசிரியர் ( ஓய்வு )தில்லை நடராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்
தாழ்வு மனப்பான்மையை கடந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். ஆண்டிபட்டி அரசு கல்லூரி விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு. தாழ்வு மனப்பான்மையை கடந்து வந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரி விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி .பேசினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15 வது நிதி குழு நிதியிலிருந்து மாவட்ட கவுன்சிலர் வளர்மதி மகராஜன் பரிந்துரையின் பேரில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது . அதை திறந்து வைத்து, பின்னர் நடந்த கல்லூரி விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சிறப்புரையாற்றினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சுஜாதா தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் பேராசிரியர் விஜயா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேர்மன் சந்திரகலா, முன்னாள் சேர்மன் ராமசாமி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிஷாந்த் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சேகர் ,ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து ,தேசிய நல் ஆசிரியர் ( ஓய்வு )தில்லை நடராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சிறப்புரையாற்றிய தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை கடந்து வந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். தாழ்வு மனப்பான்மையை செருப்புக்கு கீழே தள்ளி விட வேண்டும். மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளும் உத்வேகத்தை ஏற்படுத்தினால் வெற்றி பெறலாம். தமிழக முதல்வர் அவர்கள் ,பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் மற்றும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற திட்டங்களை கல்வித்துறைக்காக செய்து வருகிறார். எனவே மாணவர்கள் கல்லூரி நேரத்தில் பேராசிரியர்கள் கற்றுத் தரும் பாடங்களை, வகுப்பறைகளிலேயே கவனமுடன் மனதில் ஏற்றிக்கொண்டு ,தேர்வை சந்தித்தால் கண்டிப்பாக வெற்றி உங்கள் வசமாகும். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் எம்எல்ஏ ,எம்பிக்கள் ,அமைச்சர்கள் பரிந்துரை கடிதம் கொடுத்தால் கூட வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது .ஆகவே உங்கள் துறை சார்ந்த அறிவு திறனை வளர்த்தால் மட்டுமே உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவே உங்களுக்காக உழைத்திடும் ஆசிரியர்கள் ,பேராசிரியர்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நீங்கள் சாதித்து காட்ட வேண்டும். கல்லூரி சார்பில் வைக்கப்பட்ட கல்லூரிக்கான சுற்றுச்சுவர், கலையரங்கம், தண்ணீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்டவைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன் என்று பேசினார். நிறைவாக ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ராதாமணி நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ,அலுவலக பணியாளர்கள், மாணவ ,மாணவிகள் பங்கு கொண்டனர்.
Next Story