பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
1கீ போர்டு செல்போன், 4 ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). பாடாலூரில் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 1கீ போர்டு செல்போன், 4 ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் நல்லேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story