வங்கி ஏ.டி.எம். கார்டு மோசடி  செய்து பணம் திருட்டு

குமாரபாளையத்தில் வங்கி ஏ.டி.எம். கார்டு மோசடி செய்து பணம் திருடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 48. சொந்தமாக பவர்லூம் தறிபோட்டு தொழில் செய்து வருகிறார். இவர் பெருந்துறை ரேப்கோ வங்கியில் 18 லட்சம் கடன் கேட்டதில், இதில் முதல் தவணையாக இவரது எஸ்.பி.ஐ. வங்கி கணக்கில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், டிச.26ல் வரவு வைக்கப்பட்டது. டிச.27ல் மாலை 06:00 மணியளவில், குமாரபாளையம் எஸ்.பி.ஐ. வங்கி, ஏ.டி.எம். சென்டருக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். கார்டு கிக்கிகொண்டதால், அருகே இருந்த இந்திக்காரர் ஒருவர், கார்டை எடுக்க முயற்சிப்பது போல், எடுத்து வேறு ஒரு கார்டு கொடுத்துள்ளார். மறுநாள் இவரது வங்கி  கணக்கில் 2 லட்சத்து 15 ஆயிரம் குறைந்துள்ளது பற்றி, இவரது மகன் கூறியுள்ளார். இந்த கார்டை பயன்படுத்தி பவானி நகைக்கடையில் 65 ஆயிரத்திற்கு நகையும் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. கார்டை பிளாக் செய்து விட்டு, குமாரபாளையம் போலீசில் முத்துசாமி புகார் செய்தார். போலீசார் விசாரணையில் கார்டு மூலம் பண மோசடி செய்த நபர், திருப்பூர், பெருமாநல்லூர் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story