அம்மாவாசைகளுக்கு அமாவாசை தான் பதில் கூற வேண்டும் - செல்வப் பெருந்தகை பேட்டி

X
திருச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்திற்கு பங்கு கொள்ள வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்ல பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெரியாரை குறித்து தொடர்ந்து சீமான் பேசி வருகிறார். என்ற கேள்விக்கு கருத்தை பலமுறை சொல்லிவிட்டேன் சொல்வதற்கு ஒன்றுமில்லை யாரோ திருப்திரி படுத்துவதற்காக இதனை கையில் எடுத்து செய்து வருகிறார். இது தேவையில்லாதது. நீர்த்தார் பெருமை என முன்னோர்கள். கூறியிருக்கிறார்கள். அவர் இறந்து போனவர்களை வைத்து அரசியல் செய்கிறார் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை குறித்து பேசுகிறார் இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை இதை தவிர்ப்பது அவருக்கு நல்லது இயக்கத்திற்கும் நல்லது. அண்ணாமலை எங்கே எது பேசி இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மாநில அரசுக்கு தான் உள்ளது தமிழக முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றிய அரசு செய்ய முடியாது. மதிய தொகுப்பில் இருப்பதை அவர்கள் செய்ய முடியும் மாநில சுயாட்சி தத்துவம் எங்கே இருக்கிறது அவர்கள் பேசுவதை பார்த்தால் இது எல்லாம் இருக்கிறதா என தெரியவில்லை நமது அரசியல் அமைப்புச் சட்டம் வலிமையானது இதை தவிர்த்து விட்டு கொடுங்கோள் ஆட்சியை தமிழ்நாட்டில் திணிக்க முடியாது. அதற்கு அதற்கு முன் உதாரணங்கள் உள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் டங்ஸ்டன் வராது என தெரிவித்துவிட்டார். அப்படி வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துவிட்டார். அண்ணாமலைக்கு ஏதாவது கிடைக்குதா என்பது பார்ப்பார். நான் பேட்டி கொடுத்ததை வைத்து கச்சத்தீவை வைத்து பேசி வருகிறார். கச்சத்தீவை பற்றி பேசும் அண்ணாமலை அருணாச்சலப் பிரதேசத்தை பற்றி ஏன் பேச மாட்டேங்கிறார்? அருணாச்சல பிரதேசம் நம் நாட்டில் அங்கமாய் இருக்கிறதா? இல்லையா? பல சதுர கிலோமீட்டர்களில் கிராமங்கள் அமைக்கப்பட்டு விட்டது போலஅதற்கு வாய் திறந்ததில்லை. 4000 சதுர மீட்டர் எடுத்து புள்ளி அஞ்சு சதுர கிலோமீட்டர் கச்சத்துவே கொடுத்துள்ளனர். நாகரிகமற்ற பேச்சை பேசி வருகிறார். வாஜ்பாய் இந்திரா காந்தியை தேசத்தின் துர்காதேவி என கூறினார். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியை பற்றி அண்ணாமலை மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார். அண்ணாமலைக்கு நாவடக்கம், நாகரிகம் வேண்டும் இவரைப் போன்று எவ்வளவோ பேர் பேசியவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பண்பாக சொல்கிறேன் அண்ணாமலை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது.. நாங்கள் நாங்கள் எல்லாவற்றையும் எடுப்போம் விடுதலை, தியாகம், சுகந்திரம் போன்றவற்றிற்கு உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இல்லையென்றால் நாங்கள் அனைத்தையும் கையில் எடுக்க வேண்டிய சூழல் வரும். 17 லட்சம், 20 லட்சம் கொடுக்கிறேன் என்று கூறி ஏமாற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர்கள் . இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற தலைவர்களை பற்றி என்ன அருகதை உள்ளது. வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்துகிறார்? நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதைத்தான் சொல்கிறோம். எதுவும் கடந்து போக முடியாது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் அதுமட்டுமில்லை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறோம் என்றார். காவல்துறைக்கும் சில வழக்குகள் சவாலாக இருக்கிறது. முயற்சி எடுத்து வருகின்றனர் குற்றவாளிகை என தெரிந்தால் விட்டு விடுகிறார்களா. அனைத்திலும் அரசியல் செய்து பேசுவதற்காக ஏதாவது ஒன்றை பேசக்கூடாது... குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இரும்பு கரம் கொண்டு காவல்துறையினர் அடக்க வேண்டும்.. ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பிரச்சாரம் செய்ய விடுவதில்லை என குற்றச்சாட்டு எழுப்புகின்றனர் அது குறித்து?* பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு பெரியார் பிறந்த மண்ணில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் செய்தால் அவருடைய ஆதரவாளர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள். அந்த மண் மக்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள் அதற்கு பதில் சொல்லுங்கள்... இன்னும் 13 அமாவாசையில் திமுக ஆட்சி முடிந்து விடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு? அம்மாவாசைகளுக்கெல்லாம் அம்மாவாசை தான் பதில் சொல்ல வேண்டும் என்னை கேட்டால் நான் என்ன சொல்வது என கூறிவிட்டு கடந்து சென்றார். பேட்டியின் போது திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் கலை, செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story

