மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

  மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
X
வெள்ளிச்சந்தை
குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள மைகுளத்தங்கரை பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன்  மகன் சுரேஷ் (28). இவர் நாங்குநேரியை சேர்ந்த கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  கடந்த இரண்டு மாதங்களாக ஜவகர் காலனி பகுதியில் ஒரு வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.        சம்பவ தினம் கோபிகா திடீரென அம்மா வீட்டுக்கு செல்வதாக தனது துணிகளை எடுத்து செல்ல முயன்றுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் மனைவி கோபிகாவை பயமுறுத்த நினைத்து வீட்டில் அடுப்பு எரிக்க வைத்திருந்த டீசலை எடுத்து தனக்குத்தானே தரையில் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்.          இதில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை  உயிரிழந்தார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story