பெரம்பலூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி திட்டங்களை ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர், தண்ணீர் பந்தல், வேப்பூர், சித்தளி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், முன்னிலையில் இன்று (23.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதால் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, கட்டடக் கழிவுகள் அனைத்தையும் விரைந்து அகற்றி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.248 லட்சம் மதிப்பீட்டில் 115 கடைகள் கட்டும் பணியினை விரைந்து மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் பணியினை முடித்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, தினசரி காய்கனி சந்தைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக உழவர் சந்தை அருகில் தினசரி காய்கனி சந்தை செயல்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பயிர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டார். அதனடிப்படையில், , எளம்பலூர் கிராமத்தில் வெங்காய பயிர் பாதிக்கப்பட்டுள்ள வயலினையும், சித்தளி கிராமத்தில் மஞ்சள் மற்றும் கருணைக்கிழங்கு பயிர்கள் பாதிக்கப்பட்ட வயல்களையும் பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அந்தந்த விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்தும் இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும் கேட்டறிந்த கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பயிர்சேதம் குறித்து துறை சார்பில் அரசுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் அடங்கிய கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். பின்னர் தண்ணீர் பந்தல் இந்திரா நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதையும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் பணி முன்னேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் பழுது நீக்கப்பட்டு வருகின்றது, இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எத்தனை வீடுகளின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை திட்ட இயக்குநரிடம் கேட்டறிந்தார். இத்திட்டம் தங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். பின்னர், தண்ணீர்பந்தல் இந்திரா நகர் பகுதி குழந்தைகள் நல மையத்தினை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், எத்தனை குழந்தைகள் சேர்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் தவறாமல் வருகிறார்களா என்பது குறித்து வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, குழந்தைகளின் எடை உயரங்கள் அளவீட்டு பார்த்தும், குழந்தைகள் அனைவரையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என குழந்தைகள் நல அமைப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியின் கட்டுமான பணி முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பணியினை விரைந்து முடித்து மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேளாண்மை இணை இயக்குநர் பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story





