உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு சார் ஆட்சியர் கோகுல் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்) சதானம் செய்யப்பட்டது.
உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு சார் ஆட்சியர் கோகுல் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் மஜீரா VRSS புரம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), த/பெ. எல்லப்பன் என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) இரவு 7 மணியளவில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்) சதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (23.01.2025) பிரம்மதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரின் உடலுக்கு இரவு 8 மணி அளவில் பெரம்பலூர் சார் ஆட்சியர் சு.கோகுல் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.மாயகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story