முத்தூர் அருகே டிராக்டர் மோதி லாரி டிரைவர் பலி

முத்தூர் அருகே டிராக்டர் மோதி லாரி டிரைவர் பலி
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம்  முத்தூர் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா எழுமாத்திமங்கலம் கிராமம் ராசம்பாளையம் காலனி சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 41). இவர் லாரி டிரைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் குமார் முத்தூரில் உள்ள தனது உறவினரை பார்க்க தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். முத்தூர் ஆலம்பாளையம் சாலையில் நம்ம கவுண்டன்பாளைய சுடுகாடு பகுதியில் உள்ள பாலத்தின் அருகே மாலை 6 மணி அளவில் வந்து கொண்டிருந்த சந்தோஷ் குமார் மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு இறங்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக பின்னால் வந்த டிராக்டர் ஒன்று திடீரென்று சந்தோஷ் குமார் மீது மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் கை,கால்களில் அடிபட்டு பலத்த காயமடைந்த சந்தோஷ் குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story