வைகை ஆற்றங்கரையில் பாதை அமைத்தவருக்கு ஓராண்டு சிறை

வைகை ஆற்றங்கரையில் பாதை அமைத்தவருக்கு ஓராண்டு சிறை
X
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றுக்கரையில் பாதை அமைத்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன்(61). இவர் கடந்த 26.06.2018 அன்று திருப்புவனம் அருகே டி.பாப்பாங்குளம் விலக்கு அருகே வைகை ஆற்றின் தென்கரையில் அனுமதி இன்றி மணல் அள்ளிச் செல்ல வசதியாக பாதை அமைத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த வருவாய்த் துறையினர் பாதை அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்த புகாரில் திருப்புவனம் போலீசார் ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபாகர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன் குற்றம் சாட்டப்பட்ட ஹரிகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் அழிப்பு தடை சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.4ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Next Story