சரோஜா அம்மாள் படத்திறப்பு விழா

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார் கூடல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ராணுவ வீரர் கலியன் மனைவியும், மின்சார வாரிய உதவி பொறியாளர் வேல்முருகன், ஆசிரியர் பாபாஜி ஆகியோரின் தாயாருமான சரோஜா அம்மாள் அவர்கள் கடந்த 8ந் தேதி இறந்து விட்டார். அவரது உருவப்பட திறப்பு விழா நேற்று அவரது இல்லத்தில் நடந்தது. முன்னதாக உதவி பொறியாளர் வேல்முருகன் சங்கீதா தம்பதியினர், பாபாஜி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா கலந்து கொண்டு உருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ராதா, பாலகுருசாமி, என்எல்சி தொமுச நிர்வாகி செல்வம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாரி ஜெய்பூ நிஷா மற்றும் தலைமை ஆசிரியர் மலர்விழி, மாத்தூர் மருந்தாளுநர் சிவசங்கரன், வேல்விழி அருள் காந்தி, வேல் விசாலாட்சி, சிவகுருநாதன், ஆசிரியர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன், ஜெயக்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சரோஜா அம்மாள் அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story

