விருத்தாசலத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விருத்தாசலத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
X
மோட்டார் வாகன ஆய்வாளர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு விழுப்புரம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு விருத்தாசலம் கோட்டம் சார்பில் விருத்தாசலத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அய்யாதுரை தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சாலை பாதுகாப்பு தர்மராஜா, விருதாம்பிகை கல்வி நிறுவன நிறுவனர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி கோட்ட பொறியாளர் வசந்த் பிரியா அனைவரையும் வரவேற்றார். உதவி கோட்ட பொறியாளர் சாலை பாதுகாப்பு கண்ணன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்பு வாகனத்தை இயக்க வேண்டும். கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு வழங்கினர். முடிவில் உதவி பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.
Next Story