விருத்தாசலத்தில் அதிக சத்தம் எழுப்பிய தனியார் பஸ் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

விருத்தாசலத்தில் அதிக சத்தம் எழுப்பிய தனியார் பஸ் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
X
மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் எமதர்மன் வேடம் அணிந்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ்கள் அதிக சப்தம் எழுப்பியபடி வந்தது. இதனை பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தனியார் பஸ்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தார். தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் ஏன் ஹாரன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் பஸ் டிரைவர்களிடம் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story