விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விசிக சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

X
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி புத்தூரில் பல வருடங்களாக இலவச வீட்டுமனைபட்டா கேட்டு பொதுமக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருத்தாசலம் நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் சையத் மெக்மூத் விடம் வலியுறுத்தினார். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக கோட்டாட்சியர் இடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர் இச்சம்வத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story

