தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் புகார் மனு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் தனக்கு கீழ் பணி புரியும் செவிலியர் மற்றும் உதவியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும், தொலைபேசியில் தொந்தரவு செய்து வந்த நிலையில் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து துறைகளிலும் 200க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார் அந்த புகாரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் ஒருவர் செவிலியர்கள் மற்றும் பெண் உதவியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும் , தொலைபேசியில் தொல்லை செய்வதாகவும் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு செவிலியர் தங்களிடம் உரிய ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மயக்கவியல் மருத்துவர் மீது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிற நிலையிலும் பாதிக்கப்பட்ட செவிலியரிடம் சம்பந்தப்பட்ட டாக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் விரைவில் பெரிய அளவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் மற்றும் மருத்துவகல்வி ஆராய்ச்சியகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனக்கு கீழ் பணி புரியும் செவிலியருக்கு அரசு மருத்துவர் பாலியல் எதிராக தொந்தரவு செய்து வந்த ஆடியோ வெளியாகும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story



