'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்

X
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகிற 29-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலா்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனா். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, மானாமதுரை அனுசியா மஹாலில் வருகிற 29-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story

