ராமநாதபுரம் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவுவாயிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதை போல அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ 6750 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரியும், தமிழக முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை சமூகநீதி கொள்கைக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் ரூ 3000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்த அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும், மேலும் தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும் அரசு அனைத்து துறை காலி பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் அதே உயர்வு வழங்க கோரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக வழங்கவும் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story

