சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
X
பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைகவசனம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.01.2025) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகள் நடைபெற்றதன் அடிப்படையில், அப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விபத்துகள் நடப்பது குறைந்துள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக கேட்டறிந்தார். புதிய மற்றும் பழைய பேருந்துநிலைம் அமைந்துள்ள பகுதி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உயிழிப்புகளை ஏற்படுத்திய விபத்துகள் ஏற்பட்ட இடங்கள், எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வாறு விபத்துகள் ஏற்பட்ட இடத்தில் இனிவரும் காலங்களில் விபத்து நடைபெறாமல் இருக்க என்ன வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒவ்வொரு பகுதிவாரியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைகவசனம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சாலை விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர், ஏற்கனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் அவற்றில் வெள்ளை வண்ணம் பூசவும், விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிறுத்தினார். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் அவற்றை தவிர்க்க எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செங்குணம் பகுதியில் சாலையைக் கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்க சாலைக்கு அடியில் உள்ள பாதையினை (பாதையினை (subway) வாகனங்கள் சென்று வர ஏதுவாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சாலையை கடக்க இந்த வழியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவா, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story