பெண் மாயம் போலீசார் விசாரணை

X
Komarapalayam King 24x7 |24 Jan 2025 6:11 PM ISTகுமாரபாளையத்தில் பெண் மாயமானார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சாரதா, 38. இவரது மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மகன், வீடு கட்ட கடன் வாங்கி, தவணைகளை செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த இவர், ஜன. 21, காலை 07:15 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தந்தை பாலமுருகன், 57, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார், புகாரின் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார், காணமல் போன சாராதவை தேடி வருகின்றனர்.
Next Story
