நல்லூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்.

X
Paramathi Velur King 24x7 |24 Jan 2025 9:06 PM ISTநல்லூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
பரமத்தி வேலூர்,ஜன.24: நாமக்கல் மாவட்டம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் காளி யாண்டி மகன் லட்சுமணன் (வயது 32). இவர் திருச்செங் கேர்ட்டில் உள்ள லாரி பாடி கட்டும்ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். ராய வேலூரை சேர்ந்த பூபாலன் மகள் மகாலட்சுமி (22). இவர் அதே பகுதியில் தனியார் மக ளிர் கல்லூரியில் பி.எஸ்சி.3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி பேசி காதலித்து வந்துள்ளனர். இந்நிலை ஏ.டி யில் கடந்த 20 ஆம் தேதி மகாலட்சுமி வீட்டில் இருந்து குடும் பத்தாருக்கு தெரியாமல் மணியனூரில் உள்ள லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் நல்லூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாது காப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் இருவரது பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்து மகாலட்சுமியை லட்சுமணன் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
