வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் -

X
விருதுநகரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக மாவட்டத் துணைத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றிக் கொடுக்க முன்வராத நிலையில் உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் டி பிரிவில் சேர்க்க வேண்டும், கடந்த 2007 ஆண்டுக்கு பிறகு பணிக்கு வந்தவர்கள் மற்றும் சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையையும், அதற்குண்டான அரசு பங்கீட்டு தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும், புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே தங்களுக்கும் சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

