நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்*

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்*
X
*திருச்சுழி அருகே நரிக்குடி முக்குரோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்*
திருச்சுழி அருகே நரிக்குடி முக்குரோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் _ - பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் நரிக்குடி முக்குரோடு அருகே செய்யது மூசா என்பவர் மனைவி மும்தாஜ் என்பவர் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஓட்டு வீடு மற்றும் சிறிய கட்டிடம் ஒன்றை கட்டிருந்ததாக கூறப்படுகிறது.‌ இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மும்தாஜ் மற்றும் செய்யது மூசா இருவரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்யது மூசா தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடம்பில் ஊற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து செய்யது மூசா அவரது மனைவி மும்தாஜ் மற்றும் அவரது மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் கட்டிடத்தை ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை முன்னிட்டு அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story