வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
X
வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரிசு வேலை மீண்டும் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் 'D' பிரிவில் சேர்க்க வலியுறுத்தியும், கிராமப் பணியைத் தவிர பல்வேறு மாற்றுப் பணிகளுக்கு கிராம உதவியாளர்களை பயன்படுத்துவதை நிறுத்திட வலியுறுத்தியும், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்தும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருச்சுழி வட்ட தலைவர் முனியசாமி, செயலாளர் சுதா, பொருளாளர் முத்துராஜா, திருச்சுழி வட்டக்கிளை ஆலோசகர் செல்வராஜ், துணைத்தலைவர்கள் கார்த்திகை சாமி, இருளாயி மற்றும் துணை செயலாளர்கள் செல்லப்பாண்டி, ஜெயசித்ரா, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, ஸ்டாலின் மற்றும் திருச்சுழி சங்க கிளையின் தணிக்கையாளர் ரமேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story