அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கம் புதிய கிளை திறப்பு விழா

அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கம் புதிய கிளை திறப்பு விழா
X
அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கம் புதிய கிளை திறப்பு விழா
அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கம் புதிய கிளை திறப்பு விழா; மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பாணி முருகன் திறந்து வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கம் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பாணி முருகன் கலந்து கொண்டு புதிய சங்க கிளை கொடியை ஏற்று வைத்து கிளையின் பெயர் பலகையும் திறந்து வைத்தார். மேலும் பெயர் பலகைக்கு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவினர். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் அமைப்பு செயலாளர் லட்சுமணன், மாநில தொழிற்சங்க தலைவர் நல்லமுத்து, மாநில பொது செயலாளர் திருப்பதி, மாநில பொருளாளர் மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story