திருவோணத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்

திருவோணத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
X
போராட்டம்
திருவோணத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் திருவோணம் வட்டார நிர்வாகிகள் கிராம உதவியாளர்கள் ஒன்றிணைந்து மாநில சங்கத்தின் முடிவின்படி ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு திருவோணம் வட்ட தலைவர் போத்தியப்பன், தலைமை தாங்கினார் வட்ட துணைத் தலைவர் ஜெயபால், வட்ட இணைச்செயலாளர் கரிகாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதற்கு முன்னதாக வட்டச் செயலாளர் சரவணகுமார் வரவேற்புரை வழங்கினார், ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் துறை, கணேசன், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டாக தொடர்ந்து' கோரிக்கை வைத்தும் நிறைவேற்றிக் கொடுக்க முன்வராத தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் சிரமப்படுவதை புரிந்துகொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கினார், அதை கடந்த 23 ஆண்டு காலம் பயன்பெற்று வந்ததை நிறுத்தம் செய்ததை திரும்பி வழங்க வேண்டும். கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஒய்வு பெற்று இறந்து போன உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையையும் அதற்குண்டான அரசு பங்கீடும் இது நாள் வரை இருப்பதை வழங்க வேண்டும். எனவே சிபிஎஸ் எண் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம உதவியாளரை பல்வேறு மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்கவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக வட்ட பொருளாளர் சுரேஷ், நன்றி கூறினார்,
Next Story