மனிதநேய வார விழா விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

X
திருவாரூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவின் தொடக்க நிகழ்வாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட புதிய ரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். மனிதனை மனிதன் மதித்து மனிதநேயத்தை போற்றுவோம் என வாசகங்கள் எழுதிய விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கையில் ஏந்தி 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story

