மன்னார்குடி நகராட்சி உடன் கிராமப் பகுதியை இணைப்பதை கண்டித்து சாலை மறியல்..
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள ராமாபுரம் ஊராட்சியை மன்னார்குடி நகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி முருகையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரை நிகழ்த்தினார் இணைப்பதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். திருவாரூர்- மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாஞ்சியூர் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் முற்றுக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர்-மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story



