திருவாரூரில் மூன்றாவது புத்தகத் திருவிழா தொடங்கியது.

திருவாரூரில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 3 வது புத்தகத்திருவிழா திருவாரூர் மாவட்டஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது , இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி , நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன் , மாரிமுத்து உட்பட தமிழ் ஆர்வலர்கள் , கவிஞர்கள் , அரசு துறை அலுவலர்கள் ,மாணவ ,மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் , இந்த 3 வது புத்தகத் திருவிழாவில் அரசு வேலைக்கு போட்டி தேர்வுகான புத்தகங்கள் , அறிவியல் புத்தகங்கள் , கலை, இலக்கிய புத்தகங்கள் , தலைவர்கள், அறிஞர்கள் வரலாறு , பொது அறிவு புத்தகங்கள் என விற்பனைக்கு உள்ள 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி ரிப்பன்வெட்டி திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார் ,மேலும் புத்தக அரங்குகளில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள துணிப்பை வழங்கும் தானியங்கும் எந்திரத்தில் பொதுமக்கள் துணிப்பையை பெற்றுக்கொண்டனர் ,புத்தகக்கண்காட்சி அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் புத்தகம் வழங்குவதுபோல் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டில் மாணவ ,மாணவிகள் புத்தகத்தை பெறுவதுபோல் செல்போனில் படம் எடுத்து ஆர்வமுடன் சென்றனர். இன்று தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ,
Next Story