குடிபோதையில் பாட்டியை தாக்கியவர் கைது

X
பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் சுந்தரமூர்த்தி (வயது 37), இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது பாட்டி தங்கம்மாள்(85), என்பவரிடம் பணம் கேட்டு தகரா றில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி தனது பாட்டியைத் தாக்கி யுள்ளார். இதில் பாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் சுந்தரமூர்த் தியை பல்லடம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

