வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

X
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கேயம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்று வருகிறது. காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் புதிய வாகன உரிமையாளர்கள், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் அனை வருக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வாகன விபத்தில் தற்காத்து கொள்வது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, தீயணைக்கும் வழிமுறைகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார போக்கு வரத்து அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

