காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை
X
காரைக்குடி அருகே காங்கிரஸ் பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, முத்துபட்டினத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(54). விவசாயியான இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக இருந்தார். அதலை கண்மாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று(ஜன.24) அதலை கண்மாய் வயலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, முத்துபாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. உடலை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் சொத்து பிரச்னை தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என குன்றக்குடி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
Next Story