பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் .
தருமபுரி ராமக்கா ஏரி அருகே தருமபுரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் சாந்தி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது ராமக்காள் ஏரி கரையில் தொடங்கி உழவர் சந்தை வழியாக நான்கு ரோடு வரை சென்று முடிந்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தி, நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் ராமக்காஏரி கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தார். இதனை தொடர்ந்து மஞ்சப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், உதவி சுற்றச் சூழ பொறியாளர்கள் கிருஷ்ணன், லாவண்யா, பீமன். சரவணன் கணேசன் மாவட்ட பசுமை பாதுகாப்பு உறுப்பினர் திருமலைவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர் தர்மபுரி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் லட்சுமி துணைத் நித்ய அன்பழகன் தர்மபுரி நகராட்சியின் ஆணையாளர் சேகர் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி இந்நிகழ்ச்சியை நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் துப்புரவு ஆய்வாளர்கள் ரமணாச்சாரன் சுசீந்திரன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் நகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
Next Story